ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்காக, ஆவின் தயாரித்து விற்பனை செய்யும் சிறப்பு இனிப்பு வகைகளை, இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் வசதியை ஆவின் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து, ஆவின் நிறுவன ஆணையர் மற்றும் நிர்வாக இயக்குநர் மரு.ந.சுப்பையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோர்க்கும் இணைப்புப் பாலமாக விளங்கும் ஆவின் நிறுவனம், தரமான பால் பொருள்களை நியாயமான விலையில் நுகர்வோர்க்கு வழங்கி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக மக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் முக்கிய இடம் பிடித்துள்ளது.
ஆவின் நிறுவனம், வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், இரசகுல்லா, லஸ்ஸி, மோர், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற 225 வகையான பால் பொருள்களை, மாநிலம் முழுவதுமுள்ள 27 ஒன்றியங்களில் தரமாகத் தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு, சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இவ்வகையில், 250 கிராம் நெய் பாதுஷாவின் விலை 190 ரூபாய் ஆகும். இதே எடையில் உள்ள நட்ஸ் அல்வா 190 ரூபாய், ஸ்டப்டு மோதிபாக் 180 ரூபாய், காஜூ பிஸ்தா ரோல் 320 ரூபாய், காஜு கத்லி 260 ரூபாய், நெய் அல்வா 125 ரூபாய், கருப்பட்டி அல்வா 170 ரூபாய் விலையில் கிடைக்கும். 500 கிராம் பலவகை இனிப்புகள் 450 ரூபாய், 200 கிராம் மிக்ஸர் 100 ரூபாய் விலையில் கிடைக்கும்.
இந்த இனிப்புகள் சுத்தமான ஆவின் நெய்யில் தயாரிக்கப்படுகின்றன. நெய் பாதுஷா, நட்ஸ் ஹல்வா, ஸ்டப்டு மோதிபாக், காஜு பிஸ்தா ரோல், காஜு கத்லி மற்றும் பலவகை இனிப்புகள், சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் தயாரிக்கப்பட்டு, தானியங்கி முறையில் அடைக்கப்படுகின்றன. இதனால், இனிப்பு வகைகளைப் பல நாட்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம். கருப்பட்டி அல்வா விருதுநகர் ஒன்றியத்திலும், நெய் அல்வா திருநெல்வேலி ஒன்றிய பால் பண்ணையிலும் தயாரிக்கப்படுகின்றன.
இவை அனைத்தும், மக்கள் அதிகளவில் கூடும் சந்தைகள், சாலைச் சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் என, தமிழகம் முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம், மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முகவர்கள் மூலமும் விற்பனை செய்யப்படும்.
கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், போக்குவரத்து மற்றும் பிற துறைகளின் நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான காரம் மற்றும் இனிப்பு வகைகளை ஆவின் நிறுவனத்தில் முன்பதிவு செய்து பெறலாம்.
மொத்தமாக முன்பதிவு செய்வதற்கு, பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம்.
சென்னை தலைமை அலுவலகம் – 73580 18395
சென்னை (தெற்கு மண்டலம்) – 73580 18391
சென்னை (வடக்கு மண்டலம்) – 73580 18392
சென்னை (மத்திய மண்டலம்) – 73580 18393
இதர மாவட்டங்கள் – 73580 18396
வாட்ஸாப் எண் – 73580 18390
கட்டணமில்லா எண் – 1800 425 3300
மின்னஞ்சல் முகவரி : aavinspecialorders@gmail.com
மேலும், https://aavin-special-order-booking.web.app என்னும் சிறப்பு முன்பதிவு இணைப்பு மூலமும் ஆர்டர் செய்யலாம். மேலும், சென்னையில் கீழ்க்கண்ட மண்டல அலுவலகத் தொடர்பு எண்கள் மூலமும் ஆர்டர் செய்யலாம்.
சென்னை வடக்கு மண்டலம்
அசோக் நகர், சித்ரா தேவி, 23464550, 99443 53459.
பெரம்பூர், செல்லப் பாண்டியன், 23464549, 94453 82932.
வண்ணாரப்பேட்டை, முல்லைதாசன், 23464548, 94441 09540.
வட சென்னை, விஜயா ஆனந்த், 23464544, 99406 39252.
வேப்பேரி, செல்வக்குமார், 23464546, 99524 96887.
பூந்தமல்லி, எம்.எஸ்.ஆறுமுகம், 26272747, 94442 75830.
போரூர், வி.என்.ஜோதி, 24826063, 93805 42590.
கொளத்தூர், ஜெயப்பிரகாஷ், 25650363, 96982 76490.
மணலி, பிரசில்லா, 25940045, 94449 62900.
தென் மண்டலம்
அடையாறு, சண்முகம், 23464589, 98406 27676.
மயிலாப்பூர், அகிலா, 23464557, 88381 53783.
பாலவாக்கம், கௌரி, 24481077, 97911 52795.
பல்லாவரம், பாபு, 22233112, 63822 92162, 73580 18418.
வேளச்சேரி. சம்பத், 22435052, 94453 38754.
தாம்பரம், ஆர்.பார்த்திபன், 22392318, 70920 31920, 90940 63224.
மேடவாக்கம், சக்திவேல், 22770049, 99441 68882.
கேளம்பாக்கம், சக்திவேல், 22770049, 99441 68882.
மறைமலை நகர், நிம்மி, 27451747, 97919 69111.
செங்கல்பட்டு, மருவரசி, 27422870, 82484 78583.
மத்திய மண்டலம்
அண்ணா நகர், எஸ்.ரேவதி, 26191944, 98407 92809.
அயனாவரம், ஜி.கே.பாரதி, 26740345, 78457 53432.
தி.நகர், ந.அரசு, 23464560, 73580 18398.
ஆவடி, வி.வெங்கடராஜன், 98847 97291.
அம்பத்தூர், பொன்மணி, 26571557, 98428 58836.
திருல்லிக்கேணி, இராமமூர்த்தி, 23464588, 91599 49031.
அண்ணாசாலை, மணவாளன், 28200646, 98409 66531.
திருநின்றவூர், தேவிகா, 26301549, 90432 01890.
பொது மக்கள் தங்களின் கருத்துகளை, ஆவினின் @AavinTn முகநூல், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3300 என்னும் எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
மு.உமாபதி