தரமான காடைத் தீவனம்!

காடைத் தீவனம் Krishi Quail Feed AdvtSmall.Pdf page 001

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019

ப்பானிய காடைகள் கடினமான தட்பவெப்ப நிலையையும் எளிதில் எதிர்கொள்ளும். அதனால், முட்டை மற்றும் இறைச்சிக்காக, மிகக் குறைந்த செலவில் வளர்க்கப்படுகின்றன. வளர்ந்த பெண் காடை முதலாண்டில் 200 முட்டைகளுக்கு மேல் இடும். தொடர்ந்து வரும் காலங்களில் ஆண்டுக்கு 300 முட்டைகளுக்கு மேல் இடும். ஒரு முட்டையின் சராசரி எடை 10 கிராமும், பொரிக்கும் குஞ்சின் எடை 6-7 கிராமும் இருக்கும்.

சரியான வளர்ச்சிக்கும், முட்டை உற்பத்திக்கும் காடைகளை நன்கு பராமரிக்க வேண்டும். இதற்குச் சமச்சீர் உணவு அவசியம். காடைப் பண்ணைகளில் தீவனச் செலவு 60-70% இருக்கும் என்பதால், மிகவும் தரமான தீவனங்களைப் பயன்படுத்த வேண்டும். பொரிக்கப்படும் காடைக்குஞ்சு 30 நாளில் இறைச்சிக்காக விற்கப்படுவதால், இதற்குப் புரதம் மிகுந்த பிரிஸ்டார்ட்டர், ஸ்டார்ட்டர் வகைத் தீவனங்கள் வழங்கப்படுகின்றன.

ஏழு வாரங்களுக்குப் பிறகு முட்டையிடும் காடைகளுக்கு, முட்டைப் பருவத் தீவனம் (காடை லேயர்) அளிக்கப்படுகிறது. இறைச்சிக் காடை 5-6 வாரங்களில் 500 கிராம் தீவனத்தை உண்டு 170-210 கிராம் எடையை அடைந்து சந்தைக்குத் தயாராகும். முட்டைக் காடை தொடர்ச்சியாக முட்டைப்பருவத் தீவனத்தை உண்டு 50 நாட்களுக்குப் பிறகு முட்டையிடத் தொடங்கும்.

கிருஷியின் காடைத் தீவன வகைகள் அனைத்தும், தேவையான எல்லாச் சத்துகளையும், குறிப்பாக, புரதம், சக்தி, வைட்டமின்கள், தாதுப்புகளைச் சரிவிகிதத்தில் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. கிருஷியின் இறைச்சி மற்றும் முட்டைக் காடைத் தீவனங்கள், குருணை மற்றும் தூள் வடிவில் 50 கிலோ பாலித்தீன் பைகளில் கிடைக்கின்றன.

கிருஷியின் இறைச்சிக் காடை பிரிஸ்டார்ட்டர் தீவனத்தில் உலர் நிலையில், (குறைந்தபட்ச அளவில்) 24% புரதம், 2,950 கிலோ கலோரி சக்தி, 4% கொழுப்பு, 1% கால்சியம், 0.5% மொத்த பாஸ்பரஸ் உள்ளன. உலர் நிலையில் (அதிகபட்ச அளவில்) 11% ஈரப்பதம், 4% நார்ச்சத்து, 0.4% உப்புச்சத்தும் உள்ளன. இத்தீவனத்தை முதல் நாள் குஞ்சுப் பருவத்திலிருந்து 2 வாரங்களுக்குக் கொடுக்க வேண்டும்.

கிருஷியின் இறைச்சிக் காடை ஸ்டார்ட்டர் தீவனத்தில் உலர் நிலையில், (குறைந்தபட்ச அளவில்) 22% புரதம், 3,000 கிலோ கலோரி சக்தி, 4% கொழுப்பு, 1% கால்சியம், 0.48% மொத்த பாஸ்பரஸ் உள்ளன. உலர் நிலையில் (அதிகபட்ச அளவில்) 11% ஈரப்பதம், 4% நார்ச்சத்து, 0.4% உப்புச்சத்தும் உள்ளன. இத்தீவனத்தை இரண்டாம் வாரம் முடிவிலிருந்து தொடங்கி 8 வாரங்கள் வரையில் கொடுக்க வேண்டும்.

கிருஷியின் முட்டைக் காடைத் தீவனம், உலர் நிலையில் (குறைந்தபட்ச அளவில்) 20% புரதம், 2,800 கிலோ கலோரி சக்தி, 3% கொழுப்பு, 3.5% கால்சியம், 0.42% மொத்த பாஸ்பரஸ் உள்ளன. உலர் நிலையில் (அதிகபட்ச அளவில்) 11% ஈரப்பதம், 4% நார்ச்சத்து, 0.4% உப்புச்சத்தும் உள்ளன. இதை ஒன்பதாம் வாரத்திலிருந்து முட்டையிடும் பருவம் வரையில் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

எளிதில் செரிக்கும் காடை இறைச்சி, அனைத்து வயதினருக்கும் ஏற்றது. இதில் புரதம் மிகுந்தும் கொழுப்புக் குறைந்தும் உள்ளன. எனவே, எதிர்காலத்தில் காடை இறைச்சியும் முட்டையும் உணவுப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கும். எனவே, குறைந்த காலம், குறைந்த முதலீட்டில் அதிக இலாபத்தை ஈட்டிட, தரமான தீவன மேலாண்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: 04294-223466.


கிருஷி நியூட்ரிஷன் கம்பெனி பிரைவேட் லிமிடெட்,

தொழில் நுட்பம் மற்றும் திட்ட அமலாக்கத்துறை, பெருந்துறை-638052, ஈரோடு மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading