பகுதி-1 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

நீங்கள் கேட்டவை

கேள்வி: மாது, தருமபுரி.

பதில்: உங்கள் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவ மனைக்கு மாட்டை அழைத்துச் சென்று மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுங்கள்.

முனைவர் க.தேவகி

பின்குறிப்பு:

கால்நடைகளைத் தாக்கும் கோமாரி!

கொடும் கோமாரிக்கு எளிய மருத்துவம்!

கால்நடைகளைத் திடீரெனத் தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்!

கேள்வி: த.சிவக்குமார், திருமுண்டீச்சரம்.

பதில்: குடற் புழுக்களின் தாக்கம் தான் இதற்கு முக்கியக் காரணம். இது குறிப்பாக எருமைக் கன்றுகளில் அதிகமாக இருக்கும். கால்நடை மருத்துவரை அணுகி, கன்றுகளுக்கும், ஏனைய கால்நடைகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்தால், இத்தகைய இழப்புகளைத் தவிர்க்கலாம்.

முனைவர் க.தேவகி

பின்குறிப்பு:

கன்றுகளைத் தாக்கும் உருளைப் புழுக்கள்!

கன்றுகளின் முழுமையான சத்துணவு சீம்பால்!

கன்று வளர்ப்பு முறை!

பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

இளம் கன்றுகளை வளர்க்கும் முறைகள்!

கன்று வளர்ச்சிக்குத் தாதுப்புக் கலவை அவசியம்!

கேள்வி: என்.எர்னஸ்ட்ராஜ், சென்னை.

பதில்: (கீழே உள்ள கட்டுரையில் முதல் அட்டவணையைக் காண்க.)

மாடித் தோட்டம் போடலாம் வாங்க..!

 

கேள்வி: அ.பசவராஜ், கே.திப்பனப்பள்ளி.

பதில்: வாய்ப்பு உள்ளது. அதனால், உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை அலுவலர்கள் அல்லது வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

கேள்வி: கலாராமன், நொளம்பூர்.

பதில்:

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள பயிர் நோயியல் துறையில், சான்றிதழுடன் காளான் பயிற்சி கிடைக்கும். 0422-6611226 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

கேள்வி: வெங்கடேசன், தருமபுரி.

பதில்: தருமபுரியில் உள்ள தோட்டக்கலைத் துணை இயக்குநர் அலுவலகம், உதவி இயக்குநர் அலுவலகம், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், வேளாண் துணை இயக்குநர் அலுவலகம், உதவி இயக்குநர் அலுவலகம் இருக்கும். இவற்றில் ஏதாவது ஒரு அலுவலகத்தை அணுகினால், உங்களுக்கு மிகச் சரியான பதில் கிடைக்கும். நன்றி!

கேள்வி: ஆர்.ஜெகதீசன், எழுவம்பட்டி.

பதில்: செம்மரத்தின் உட்பகுதி மருந்தாகப் பயன்படுகிறது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருந்து மற்றும் வாசனைப் பொருள்கள் தயாரிப்பில் உதவுகிறது. சிலைகள், பொம்மைகள், தேர்ச் சிற்பங்கள், உண்கலத் தட்டுகள் முதலானவை செய்யப் பயன்படுகிறது. அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் ஆற்றல் செம்மரத்துக்கு உண்டு. 15-25 ஆண்டுகளில் வெட்டலாம். ஒரு கிலோ மரம் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்குப் போகும்.

கேள்வி: சரவணமுத்து

பதில் 1: மஞ்சள் இரகங்கள்: கோ.1, கோ.2, பிஎஸ்ஆர் 1, பிஎஸ்ஆர் 2, ஈரோடு உள்ளூர் இரகம், சேலம் உள்ளூர் இரகம் ஆகியவை தமிழகத்தில் சாகுபடி செய்ய உகந்தவை. இப்போது பி.எஸ்.ஆர்.3 என்னும் இரகம் வெளியிடப்பட்டு உள்ளது.

பதில் 2: 

கரும்புப் பட்டங்களும் அவற்றுக்கு ஏற்ற இரகங்களும்!

பதில் 3: கரும்பு கோ.ஜி.7: நல்ல மண் வளத்தில் சராசரியாக எக்டருக்கு 134 டன்; உவர் நிலத்தில், எக்டருக்கு, 126 டன் மகசூல் கிடைக்கும். சிவப்பழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.

கேள்வி: ஜெயமுருகன், சுராங்குடி.

பதில்: கோழிகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது வெள்ளைக் கழிச்சல். கோடையிலும் குளிர் காலத்திலும் ஏற்படும் பருவ மாற்றத்தால் இந்நோய் கோழிகளைத் தாக்கும். இதைக் கொக்கு நோய் என்றும் கூறுவர். இந்நோய் தாக்கிய கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.

அதனால் உணவும் நீரும் எடுக்காமல், வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும். எச்சம் இடும்போது ஒரு காலைத் தூக்கிக் கொள்ளும். ஒரு இறக்கை செயலிழந்து தொங்கும். தலை திருகிக் கொள்ளும். இறந்த கோழியைச் சோதித்தால் இரைப்பையில் இரத்தக் கசிவு இருக்கும்.

வெள்ளைக் கழிச்சல் வராமல் தடுக்கத் தடுப்பூசியைப் போட வேண்டும். தற்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், கோழி வளர்ப்போர் எளிதாகக் கையாளும் வகையில், வாய்வழிக் குருணை மருந்தைத் தயாரித்துள்ளது.

மூலிகை மருத்துவம் மூலமும் குணப்படுத்தலாம். சின்னச் சீரகம் 10 கிராம், கீழாநெல்லி 50 கிராம், மிளகு 5 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம், வெங்காயம் 5 பல், பூண்டு 5 பல் முதலியவற்றை நன்றாக அரைத்து, தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்கலாம். மிகவும் பாதித்த கோழிகளுக்குச் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொடுக்கலாம்.

மருத்துவர் அ.இளமாறன்

கேள்வி: வெங்கடேசன், பெருவரப்பூர்.

பதில்: 2019 இல் வெளியிடப்பட்டது. ஏடிடீ 43 மற்றும் ஜெஜிஎல் 384 மூலம் உருவாக்கப்பட்டது. வயது 105-110 நாட்கள். நடுத்தர உயரம், சாயாத தன்மை, கதிரில் மணிகள் நெருக்கமாக இருக்கும். சராசரி விளைச்சல் எக்டருக்கு 6.334 கிலோ. நடுத்தரச் சன்ன அரிசியில் 26.06 பிபிஎம் துத்தநாகம், 14.7 பிபிஎம் இரும்புச்சத்து இருக்கும். 62% அரிசி கிடைக்கும். இலைச்சுருட்டுப்புழு, தண்டுத் துளைப்பான் மற்றும் குலைநோய், இலையுறை அழுகல், செம்புள்ளி நோயை மிதமாகத் தாங்கி வளரும்.  ஆயிரம் நெல் மணிகளின் எடை 14.5 கிராம். சோறு வெண்மையாகவும், அமைலோஸ் என்னும் மாவுப்பொருள் மிதமாகவும் மற்றும் ஒட்டும் தன்மை குறைவாகவும் இருக்கும்.

கேள்வி: இரமேஷ், கூடலூர்.

பதில்: கறவை மாடுகளில் ஏற்படும் மடிநோயைக் கவனிக்காமல் விட்டு விட்டால் பால் உற்பத்திப் பெரியளவில் பாதிக்கப்படும். எனவே, காலம் தாழ்த்தாமல், இதைச் சரி செய்வதற்கான சிகிச்சையைக் கால்நடை மருத்துவர் மூலம் மேற்கொள்ள வேண்டும். மூலிகை மருத்துவ முறையும் உள்ளது.

தேவையான பொருள்கள்: சோற்றுக்கற்றாழை 50 கிராம், மஞ்சள் தூள் 50 கிராம், சுண்ணாம்பு 15 கிராம், எலுமிச்சைப் பழம் 2, வெல்லம் 100 கிராம்.

பயன்படுத்தும் முறை: சோற்றுக்கற்றாழை, மஞ்சள் தூள், சுண்ணாம்பை ஒன்றாகக் கலந்து பசையாக அரைத்துக் கொள்ள வேண்டும். மடியை நன்கு கழுவ வேண்டும். பிறகு, அரைத்து வைத்துள்ள கலவையில் கையளவு எடுத்து அதை 100-150 மில்லி நீரில் கரைக்க வேண்டும். பிறகு, இதை மடி முழுவதும் நன்றாகத் தடவிவிட வேண்டும். இப்படி ஒரு நாளில் பத்து முறை செய்ய வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்களுக்குச் செய்து வர வேண்டும்.

எலுமிச்சைப் பழங்களை இரண்டாக நறுக்கி, மாட்டுக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். இப்படி ஒருநாளில் இரண்டு முறை கொடுக்க வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வர வேண்டும்.

பாலில் இரத்தம் கலந்து வந்தால், சோற்றுக்காற்றாழை, மஞ்சள் தூள், சுண்ணாம்புக் கலவையுடன், இரண்டு கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் வெல்லத்தைச் சேர்த்துப் பசையைப் போல நன்றாக அரைத்து, மாட்டுக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை வீதம், மடிநோய் சரியாகும் வரையில் இதைக் கொடுத்து வர வேண்டும்.

கேள்வி: து.முருகேசன், காஞ்சிப்பாடி.

பதில்: 

https://pachaiboomi.in/tree-cultivation-in-barren-lands/

கேள்வி: விக்னேஷ், வேலூர்.

பதில்: விவசாயத்தில் பயன்படுத்தும் இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகள், விளை பொருள்களில் எஞ்சிய நஞ்சாகத் தங்குவதால் நம் உடல் நலம் பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுகிறது என்பதை அனைவரும் அறிவோம். அதனால் தான் இன்று உலகமே இயற்கை விவசாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, உணவுப் பொருளாகப் பயன்படும் சுருள்பாசியில், வேதிப் பொருள்களைப் பயன்படுத்துவதால் உடல் நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும் தானே?

கேள்வி: எஸ்.கணேசன், உள்ளட்டி.

பதில்: உங்களுக்கு அருகிலுள்ள வங்கியை அணுகிக் கேட்டுப் பாருங்கள்.

கேள்வி: பி.மகாதேவன், வி.காமாட்சிபுரம்.

பதில்: 

பசுமாடு வளர்ப்பு!

கேள்வி: வெங்கட்ராமன், ஆலங்குடி.

பதில்:

உங்கள் நிலத்து மண்ணை எடுத்துப் பரிசோதனை செய்யுங்கள். அப்போது உங்கள் நிலத்தில் நன்றாக வளரும் மரங்களைப் பற்றிய விவரம் கிடைக்கும். அதில், செம்மரமும் நன்றாக வளரும் என்றால், தாராளமாக வளர்க்கலாம். மண்ணைப் பரிசோதனை செய்ய உங்கள் பகுதி வேளாண்மை அலுவலரை அணுகிக் கேளுங்கள். விவரம் கிடைக்கும்.

கேள்வி: அ.வேல்முருகன், பாடாலூர்.

பதில்:

சத்துக்குறை இருக்கலாம். அல்லது பூச்சி, நோய்த் தாக்குதலாக இருக்கலாம். செடியை நேரில் பார்த்தால் தான் உண்மை நிலை அறிந்து அதற்கு ஏற்ப தீர்வு சொல்ல முடியும். எனவே, உங்கள் பகுதி வேளாண்மை அலுவலர் அல்லது தோட்டக்கலை அலுவலரை அணுகித் தீர்வுக்கு முயற்சி செய்யுங்கள்.

முனைவர் காயத்ரி சுப்பையா

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading