நபார்டு தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன் தகவல்
கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019
ஒருங்கிணைந்த வேளாண் விளைபொருள் விற்பனைத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்த, மானியத்துடன் கூடிய கடனுதவியை, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வழங்கி வருகிறது. இதுகுறித்து நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டலத் தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன் நம்மிடம் கூறியதாவது:
“ஒருங்கிணைந்த வேளாண் விளைபொருள் விற்பனைத் திட்டத்தின் கீழ், சேமிப்புக் கட்டமைப்பு மற்றும் அதைச் சார்ந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல்; அவற்றில் புதுமையான மற்றும் நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துதல்; விளைபொருள் விற்பனையில் போட்டி மற்றும் மாற்று வழிகளை உருவாக்குதல்; சிறியளவிலான அமைப்புகளை உருவாக்கி, உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு உதவுதல்;
நுகர்வோர் பயனடையும் வகையில் சிறந்த கிராமியச் சந்தைகளை உருவாக்கி, தேசிய விவாதச் சந்தை இணையதளத்துடன் இணைத்து, இந்தச் சந்தைகள் மேம்பட ஊக்கமளித்தல்; விளைபொருள்களின் தரம், தரப்படுத்தல் மற்றும் தரச்சான்றுக்கான கட்டமைப்புகளை வழங்கி, விவசாயிகளுக்கு உற்பத்தித் தரத்தை அடிப்படையாகக் கொண்ட மதிப்பை உறுதிப்படுத்துதல், எதிர்கால வணிகத்தை ஊக்கப்படுத்துதல் போன்றவை இந்தத் திட்டத்தின் நோக்கங்களாகும்.
தகுதியான விற்பனை உள்கட்டமைப்பு
சேமிப்பு மற்றும் பிற விற்பனை உள்கட்டமைப்புத் திட்டங்கள் முக்கியச் செயலாக்கம் வரை, மூல விளைபொருள் ஒன்றுக்குக் கூடுதலாக மதிப்பீடு செய்வதுடன், செயலாக்கத்தின் பின், தயாரிப்பு வடிவத்தில் மாற்றம் விளைவிப்பதில்லை. முதன்மைச் செயலாக்க உள்கட்டமைப்பில், துப்புரவு, வெட்டுதல், தானியச் சுத்திகரிப்பு, சுத்த அரிசிப் பிரிப்பான், சூரிய மற்றும் சாதாரண நிலையில் உலர்த்தும் கருவிகள், தரவரிசை, வரிசைப்படுத்துதல், சிப்பம் கட்டுதல், பை தைத்தல், மெருகிடல், பெயரிடல், பழுக்க வைத்தல், குளிர்வித்தல், உறைவித்தல், மற்றும் பிற மதிப்புக்கூட்டு நடவடிக்கைகள் போன்றவை.
எண்ணெய் எடுக்கும் சிறு கருவி, உள்நாட்டு எண்ணெய் வித்துகள். சுத்திகரித்தல், வரிசைப்படுத்தல், பிரித்தல், சிப்பம் கட்டுதல் மற்றும் நேரடி விற்பனை வசதியைக் கொண்ட சிறிய பருப்பாலை. சந்தையில் உள்ள பொதுவான வசதிகள் திட்டத்தில் துணை புரியும் ஊக்குவிப்பு உள்கட்டமைப்பு உட்பட, மொத்த மானியத்தில் 25% மானியம் மட்டும் வழங்கப்படும். தனியாகத் துணை உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆதரிக்க முடியாது.
தானியங்கி உள்கட்டமைப்பு அறுவடை உட்பட, ரீஃப் அல்லது குளிரூட்டப்பட்ட வேன்கள், லாரிகள் போன்ற வாகன உதவி கிடைக்காது. விவசாயிகள் வசதி மையங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு, மின்வணிகம், விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மூலம், சந்தை நுண்ணறிவு மற்றும் சந்தை தொடர்பான நீட்டிப்பு. தனியாகத் தரப்படுத்தப்பட்ட குளிர் சேமிப்பு அறைகள், என்.சி.சி.டி.யால் மேம்படுத்தப்பட்ட தரநிலைகளின்படி 1000 எம்.ட்டி. வரையில் எம்.டி.எச். விலைப்படி அனுமதிக்கப்படும். சேமிப்பு உள்கட்டமைப்புத் துணை வசதிகளுடன், உணவு தானியங்களைச் சேமித்து வைக்கும் சேமிப்புக் கிடங்கு போன்றவை இதில் அடங்கும்.
நுகர்வோருக்கான விவசாயிகள் சந்தை
2018-19 வரவு செலவுத் திட்ட அறிவிப்பின்படி, ஏற்கெனவே உள்ள கிராமிய, உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, கிராமிய வேளாண் சந்தைகள் மேம்படுத்தப்படும். இவற்றுக்கான உட்கட்டமைப்புகள், பஞ்சாயத்துகள், ஏ.பி.எம்.சி.கள்/ ஆர்.எம்.சி.கள், மாநில நிறுவனங்கள், விவசாயிகள், விவசாயக் குழுக்கள், தனியாட்கள், அறக்கட்டளைகள் போன்றவர்களால் உருவாக்கப்படும். கிராமிய வேளாண் சந்தையின் உள்கட்டமைப்புகளாக, சந்தைப்படுத்தல் உட்கட்டமைப்புக் கூறுகள் இணைய இணைப்பு, சேமிப்புக் கிடங்கு, குளிர் அறையில் ஆழமான குளிர்விப்பான், பழுக்க வைக்கும் சேம்பர், தகவல் பலகைகள், தானியத் துப்புரவாளர், குறிப்பிட்ட புவியீர்ப்புப் பிரிப்பான், சிறிய பருப்பாலை, எண்ணெயாலை, அரிசியாலை போன்றவை இருக்கலாம். இவற்றை ஊராட்சிகள், உற்பத்தி மற்றும் விற்பனைக் குழுக்கள், கூட்டுறவு அமைப்புகள், தனியாட்கள் நிர்வகிக்கலாம்.
மாநில அரசு அல்லது மாநில அரசால் நியமிக்கப்பட்ட முகவர்கள், MGNREGA திட்டத்தின் அடிப்படை மற்றும் துணை புரியும் உட்கட்டமைப்புகளுக்கு வழங்கப்பட்ட மானிய நகல் இல்லாமல், கிராம நிர்வாகிகளுக்குச் சொந்தமான உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை AMI திட்டத்தின் உதவியால் பெறலாம். நிதி ஆயோக் மூலம் அடையாளம் காட்டப்பட்ட மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
FPO/FPC மூலம் பொதுமக்கள் வசதி மையத்தை ஊக்குவித்தல்
பதிவு செய்யப்பட்ட FPO நிறுவனத்தின் குறைந்தளவு 50 உறுப்பினர்கள் இத்திட்டத்தின் கீழ் தகுதியுடயவர்கள். இதற்கான பொது வசதி மையத்தை அமைப்பதற்கான உட்கட்டமைப்பு வசதி, கணினி, தகவல் தொடர்பு வசதி, சேமிப்புக் கிடங்கு, குளிர் அறையில் ஆழமான குளிர்விப்பான், பழுக்க வைக்கும் சேம்பர், தகவல் பலகைகள், தானியத் துப்புரவாளர், குறிப்பிட்ட புவியீர்ப்புப் பிரிப்பான், சிறிய பருப்பாலை, எண்ணெயாலை, அரிசியாலை போன்றவற்றை உள்ளடக்கியது.
பயனாளிகள்
50-5,000 எம்.ட்டி உட்கட்டமைப்பு மற்றும் அல்லாத சேமிப்புக் கட்டமைப்பை உருவாக்க, தனியாட்கள், விவசாயிகள், விவசாயக் குழுக்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவுச் சந்தைப்படுத்தல் கூட்டமைப்புகள், அரசின் தன்னாட்சி அமைப்புகள், மாநில நுகர்பொருள் நிறுவனங்கள் போன்றவை. 50-10,000 எம்.ட்டி.எஸ். சிலோஸ் 15,000 எம்.ட்டி. உட்கட்டமைப்பை உருவாக்க, மாநில அரசுத் துறைகள், அரசுசாரா நிறுவனங்கள், மாநில நுகர்பொருள் நிறுவனங்கள் போன்றவை. விவசாய நுகர்வோர் சந்தையை உருவாக்க, மாநில அரசு அல்லது அதனால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்கள், பஞ்சாயத்துகள், விவசாயிகள், தனியாட்கள் போன்றவர்கள்.
பங்களிப்பு மற்றும் காலக்கடன்
பயனாளியின் குறைந்தபட்ச பங்களிப்பானது, திட்டச் செலவில் 20% இருக்க வேண்டும். உண்மையான செலவின நேரத்தில் 20%க்கும் குறைவாக இருந்தால், திட்டத்தின் உண்மையான டி.ஓ.ஓ. மானியத்தைக் கணக்கிட, 5 மடங்குக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படும். நிதி நிறுவனத்தால் வழங்கப்படும் காலக்கடன் திட்டச் செலவில் 50% இருக்க வேண்டும். பயனாளியின் பங்களிப்பு 20-50% மொத்த நிதி ஒதுக்கீடு ட்டி.எஃப்.ஓ.விலிருந்தும் காலக்கடன் 50 முதல் 80% வரை மாறுபடலாம்.
தமிழ்நாட்டில் மானியம்
பதிவு செய்யப்பட்ட விவசாய உற்பத்தி நிறுவனங்கள், பஞ்சாயத்துகள், மகளிர், எஸ்.சி., எஸ்.ட்டி. தொழில் முனைவோர் அல்லது அவர்களின் சுய உதவிக் குழுக்கள், சேமிப்பு உட்கட்டமைப்புக்கான மொத்த மூலதனத்தில் 33.33% தொகையை மானியமாகப் பெறலாம். மற்ற அனைத்துப் பயனாளிகள் 25% தொகையை மானியமாகப் பெறலாம். சேமிப்புக் கிடங்கைத் தவிர, கிராமச் சந்தை போன்ற கிராம மேம்பாட்டுக்குச் செய்யும் முதலீட்டில், 33.33% தொகையை முதல் பிரிவினரும், 25% தொகையை இரண்டாம் பிரிவினரும் மானியமாகப் பெறலாம்.
திட்டத்தை முடிக்கும் காலம்
நபார்டு மற்றும் என்.சி.டி.சி. மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும், கடனுதவியின் முதல் தவணையை வழங்கியதில் இருந்து 18 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும். சொந்த நிதியளிக்கப்பட்ட அரசு நிறுவனத் திட்டங்கள், டி.ஏ.வி.& எஃப்.டபிள்யூ. அனுமதிக்கும் குழுவின் திட்ட ஒப்புதல் தேதியிலிருந்து 30 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும். ஆறு மாத நீட்டிப்பு அளிக்கப்படும். ஆனால், மாதம் 0.5% மானியம் குறைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
முறையான திட்ட அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களுடன், மானியத்துடன் அடங்கிய காலக்கடனுக்காக நிதி நிறுவனத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அது தவணைக்கடனை அனுமதிக்கும். கடனை வழங்கிய நிதி நிறுவனம் முதல் தவணையைக் கொடுத்த 60 நாளில் நபார்டுக்கு மானியத்துக்காக விண்ணப்பிக்கும். தகுதியான திட்டங்களுக்கு அனுமதியை வழங்கும் நபார்டு, நிதி நிறுவனத்துக்கு முன் மானியத்தை வழங்கும். இத்திட்டம் முடிந்த பிறகு, கடனை வழங்கிய நிறுவனம் இறுதி மானியத்தைப் பெறவும், திட்டத்தை ஆய்வு செய்யவும் விண்ணப்பிக்கும். இந்த அடிப்படையில் அனுமதியை வழங்கும் நபார்டு, இறுதி மானியத்தை விடுவிக்கும். இத்திட்டம் குறித்து மேலும் விவரங்களைப் பெற, அருகிலிருக்கும் நபார்டு வங்கியை அணுகலாம்’’ என்றார்.
மு.உமாபதி