பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

கன்றுத் தீவனம் மாட்டை மட்டும் கட் பண்ணி வைக்கவும் HP scaled e1611793976184

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019

நாளைய பால் தரும் பசுக்களாம் இன்றைய கிடேரிக் கன்றுகளின் நலன், பண்ணையாளர்களின் அக்கறையைப் பொறுத்தே அமைகிறது. ஒரு பண்ணையின் மரபு சார்ந்த பண்பில், பொருளாதார முன்னேற்றத்தில், பண்ணையில் பிறக்கும் ஒவ்வொரு கன்றுக்கும் பெரும்பங்கு உண்டு. ஒரு கன்று நன்கு வளர்கிறது என்று சொன்னால், அதன் உடல் எடை தினந்தோறும் 500 கிராம் வீதம் கூடிக்கொண்டே இருக்க வேண்டும். இப்படி வளர்ந்தால் அந்தக் கன்று 3 முதல் 6 மாதங்களில் 70 கிலோவிலிருந்து 130 கிலோ எடையை அடையும். இந்தச் சரியான உடல் எடையை அடைய, ஓராண்டு வரையில் கன்றுகளுக்கு உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனத்தோடு, சரியான அடர் தீவனத்தையும் கொடுக்க அவசியம்.

பால்பண்ணைத் தொழிலில் கன்றுகளைப் பராமரிப்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில், கன்றுகளைப் பராமரிக்கும் திறன், நடைமுறைப்படுத்தும் உத்திகள் மற்றும் தொடர் கவனம் பண்ணையாளர்களிடம் இருக்க வேண்டும். கன்றுகளின் வளர்ச்சியில் முதல் 3 மாதங்கள் முக்கியமானவை.  சரிவரத் தீவனம் அளிக்காத காரணத்தால் தான், இந்தியாவில் 25-30 சதவீதக் கன்றுகள் இறக்க நேர்கிறது. இதுவே, பால்பண்ணைத் தொழில் நஷ்டம் அடைவதற்குக் காரணியாகிறது. கன்றுகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தியை அளிக்கக்கூடிய, ‘கொலஸ்ட்ரம்’ என்னும் சீம்பாலின் முக்கியத்தை ஒவ்வொருவரும் உணர்வது நல்லது. 

இவ்வகையில், கன்றுகளின் அடர்தீவனத் தேவையை, கிருஷி நியூட்ரிஷன் கம்பெனியின், ‘கன்றுத் தீவனம்’ பூர்த்தி செய்கிறது; கன்றுகளுக்கான சக்தியையும், புரதத் தேவையையும் உறுதி செய்கிறது. ஏனெனில்,  தரமான புரதமும், செரிமான சக்தியும் மிகவும் முக்கியம். கன்றுகள் சரியான வளர்ச்சியை அடைய, சரியான வயதில் பருவத்தை அடைய, நன்கு கறக்கும் பசுக்களாக உருவாக, KNC கன்றுத் தீவனம் உறுதுணையாக உள்ளது. 

கன்றுகளின் ஆரோக்கிய நிலையைக் கருத்தில் கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட அனைத்து ஊட்டச் சத்தியல் அளவுகளைச் சார்ந்தே, கிருஷி கன்றுத் தீவனம் தயாரிக்கப்படுகிறது. கிருஷி கன்றுத் தீவனத்தில் (உலர் நிலையில்-குறைந்த அளவில்) 20% புரதம், 75% செரிக்கும் ஊட்டச் சத்துகள், 2.5% கொழுப்பு, 1.5% கால்சியம், 1% மொத்த பாஸ்பரஸ் மற்றும் உலர் நிலையில் (அதிகளவில்) 11% ஈரப்பதம், 10% நார்ச்சத்து ஆகியன உறுதி செய்யப்படுகின்றன. 

KNC கன்றுத் தீவனம், குச்சி வடிவில் 20 கிலோ PP பைகளில் கிடைக்கிறது. கன்றுகள் பிறந்து 3 மாதங்களில் இருந்து கிருஷி கன்றுத் தீவனத்தை 250 கிராமில் தொடங்கி, 9 மாதங்களாகும் போது, ஒரு நாளைக்கு 1 கிலோ வரை அளிக்கலாம். கன்றுகள் சினையான பிறகு, பால் மாடுகளுக்கான தீவனங்களைக் கொடுக்கலாம். 

ஆகவே, அடர் தீவனம் என்பது, பால் மாடுகளுக்கு மட்டும் தான் என நினைக்கக் கூடாது; அது கன்றுகளுக்கும் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். அது பண்ணையை மேம்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு: 04294-223466.


கிருஷி நியூட்ரிஷன் கம்பெனி பிரைவேட் லிமிடெட்,

தொழில் நுட்பம் மற்றும் திட்ட அமலாக்கத்துறை, பெருந்துறை-638052, ஈரோடு மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading