குண்டுமல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

குண்டுமல்லி jasmine scaled

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019

வாத்து செய்தல்: நவம்பர், டிசம்பரில் பூ உற்பத்திக் குறைந்ததும், செடிகளைத் தரையிலிருந்து 50 செ.மீ. உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும். இதனால் புதிய கிளைகள் தோன்றி நிறையப் பூக்கும். கவாத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் பாசனத்தை நிறுத்தி, செடிகளிலுள்ள இலைகளை உருவிவிட வேண்டும். கவாத்து செய்த 15 நாள் கழித்து உரமிட்டுப் பாசனம் செய்ய வேண்டும். கவாத்து செய்த 45-60 நாட்களிலிருந்து பூக்கத் தொடங்கும்.

உர நிர்வாகம்

பத்துநாள் கழித்துச் செடிக்கு 20 கிலோ தொழுவுரம் இட வேண்டும். பின்னர் 60, 120, 120 கிராம் அளவில், தழை, மணி, சாம்பல் சத்தை இரு பாகங்களாகப் பிரித்து, நவம்பரில் மற்றும் ஜுன் அல்லது ஜூலையில் இட வேண்டும். நுண்ணூட்டக் குறை ஏற்பட்டால் இலைகள் வெளிரி, மஞ்சளாக மாறிச் சிறுத்து விடும். இதற்கு, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் ஜிங்க் சல்பேட், 5 கிராம் மக்னீசியம், 5 கிராம் இரும்பு சல்பேட் வீதம் கலந்து, இலைகள் பச்சையாக மாறும் வரையில் 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

பஞ்சகவ்யா தெளிப்பு

ஒருமாத இடைவெளியில் ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி வீதம் பஞ்சகவ்யாவையும், 40 மில்லி வீதம் ஹியூமிக் அமிலத்தையும் கலந்து தெளித்தால், செடிகளின் வளர்ச்சியும் மகசூலும் கூடும்.

பூச்சி, நோய்கள்

மொட்டுப்புழு: பேரிழப்பை ஏற்படுத்தும் இதைக் கட்டுப்படுத்த, வேப்பங் கொட்டைச்சாறு 5% கரைசல் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி மோனோகுரோட்டாபாஸ் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

செதில்பூச்சி மற்றும் சிலந்திப்பூச்சி: இவற்றைக் கட்டுப்படுத்த, மீன் எண்ணெய் சோப் ஒரு கிலோவை 50 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் வீதம் நனையும் கந்தகத்தைக் கலந்து தெளிக்கலாம்.

இலைப்புள்ளி மற்றும் வாடல் நோய்: இவற்றால் தாக்குண்ட முதிர்ந்த இலைகளை அகற்ற வேண்டும். ஒரு சத போர்டோ கலவை அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் தாமிர ஆக்சி குளோரைட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். வராமல் தடுக்க, மூன்று மாதப் பயிரில் ஒருமுறையும், தொடர்ந்து 21 நாள் இடைவெளியில் இருமுறையும் தெளிக்க வேண்டும். நோயுற்ற செடிகளின் வேர்களை நிலத்தை விட்டு நீக்க வேண்டும்.

கோடையில் ஆழமாக உழுதல் அவசியம். செடிகளைச் சுற்றி 0.2% காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது ஒரு சத போர்டோ கரைசலால் நனைக்க வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி அல்லது சூடோமோனாஸ் ப்ளுரோசன்சை, மட்கிய 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து தூவ வேண்டும். மேலும், ஏக்கருக்கு 60 கிலோ வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக இட வேண்டும்.

வேரழுகல் நோய்: ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் தாமிர ஆக்சி குளோரைடு வீதம் கலந்த கரைசலை, செடிகளைச் சுற்றி ஊற்ற வேண்டும். வடிகால் வசதி இருக்க வேண்டும்.

நூற்புழுத் தாக்குதல்: மண் மாதிரி எடுத்து நூற்புழுத் தாக்குதலைக் கவனிக்க வேண்டும். இதனால் தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் வெளிரி, இளம் மஞ்சளாகிக் கருகி விடும். இதைக் கட்டுப்படுத்த, செடிக்கு 5 கிராம் பியூரிடான் குருணையை வேர்ப் பாகத்தில் இட்டு நீரூற்ற வேண்டும். இந்த உத்திகளைச் சரியாகச் செய்தால் எக்டருக்கு 8,750 கிலோ பூக்கள் மகசூலாகக் கிடைக்கும். 


குண்டுமல்லி DHANUSHKODI e1634639335339

முனைவர் வெ.தனுஷ்கோடி,

முனைவர் நூர்ஜஹான் அ.கா.அ.ஹனீப், முனைவர் ச.ஜெ.விஜயலலிதா,

முனைவர் கோ.அமுதசெல்வி, வேளாண்மை அறிவியல் நிலையம்,

சிறுகமணி, திருச்சி-639115.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading