காளான் எவ்வளவு நல்லது தெரியுமா?

காளான் Untitled 2

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020

காளான் ஏழைகளின் இறைச்சியாகும். ஏனெனில், இறைச்சியில் உள்ள புரதத்தைப் போலவே, காளானிலும் முழுமையான புரதம் அடங்கியுள்ளது. நார்ச்சத்து மிகுந்த காளான் எளிதில் செரிக்கும். மேலும், கொழுப்பும், மாவுச்சத்தும் குறைவாக இருப்பதால், பெரியவர், சிறியவர் அனைவரும் விரும்பி உண்ணலாம். இதயநோய், இரத்தழுத்தம், மலச்சிக்கல் உள்ளோர்க்குச் சிறந்த உணவாகும்.

அறுவடைக்குப் பின் சிலமணி நேரத்தில் காளான் கெட்டு விடும். எனவே, காளானை நீண்டகாலச் சேமிப்பு, குறுகிய காலச் சேமிப்பு, டப்பாவில் பதப்படுத்துதல், காய வைத்துப் பதப்படுத்துதல், உப்புக் கரைசலில் பதப்படுத்துதல், உறைய வைத்துப் பதப்படுத்துதல், உறைந்த பின் காய வைத்துப் பதப்படுத்துதல் போன்றவற்றின் மூலம், காளான் ஊறுகாய், குருமா, பஜ்ஜி, சமோசா, போண்டா, சூப், பிரியாணி, ஆம்லெட், பொரியல், சிப்ஸ், பக்கோடா போன்றவற்றைத் தயாரிக்கலாம்.

காளானில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள், டிரிப்டோபேன், ஐசோலுசைன் மற்றும் நோயெதிர்ப்பைத் தரும் வைட்டமின்கள், தாதுகள் நிறைந்துள்ளன. காளானில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே, மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு மற்றும் உடல் எடைக் குறைப்புக்கு ஏற்ற உணவாக உள்ளது. காளானில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், போலிக் அமிலம், இரும்புச்சத்து ஆகியன, இரத்தச்சோகை போன்ற நோய்களில் இருந்து உடலைக் காக்கிறது.

மூட்டுவலி, சதைப்பிடிப்பு முதலியவற்றுக்குக் காளான் நல்ல தீர்வைத் தரும். பெண்களின் கருப்பைச் சிக்கலைச் சரி செய்யும் காளான், புற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. காளான் சாறு எய்ட்ஸ் நச்சுயிரிகளை அழிக்கப் பெரிதும் பயன்படுகிறது. காளானில் இருந்து நேரடியாக, மருந்து, மாத்திரை, பேஸ்ட் போன்றவை தயாரிக்கப் படுகின்றன.

கோனோடெர்மா போன்ற சிலவகைக் காளான்களில் இருந்து உயிர் காக்கும் மருந்து தயாரிக்கப்படுகிறது. பிளிரோடஸ் என்னும் காளானைக் காயவைத்துப் பொடியாக்கி, ஆறாத புண்களைக் குணமாக்கும் களிம்பைத் தயாரிக்கிறார்கள்.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading