திருநெல்வேலியில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்குகிறது மாபெரும் விவசாயக் கண்காட்சி!

திருநெல்வேலி 1

ச்சை பூமி – வேளாண் மாத இதழ் சார்பில், திருநெல்வேலியில் வரும் அக்டோபர் மாதம் 18, 19, 20 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில், மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற உள்ளது. 

பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில், காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இந்த விவசாயக் கண்காட்சி நடைபெறும்.

மண்ணும் மன்னுயிரும் வாழும் வகை செய்வோம் என்னும் நோக்கில், விவசாயம் மற்றும் விவசாயப் பெருமக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பச்சை பூமி மாத இதழ், அன்று முதல் தனது வேளாண் வளர்ச்சிப் பணியைச் செவ்வனே செய்து வருகிறது.

இந்த விவசாய வளர்ச்சிப் பணியை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், விவசாயம், விவசாயிகள் மற்றும் வேளாண் வணிக நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், 2021 அக்டோபர் முதல், தமிழகம் முழுவதும் பரவலாக, விவசாயக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

ஒட்டன்சத்திரத்தில் இரண்டு முறை, இராஜபாளையத்தில் ஒருமுறை, நாமக்கல்லில் இரண்டு முறை, தேனியில் ஒருமுறை, திருநெல்வேலியில் இரண்டு முறை, கோபிச்செட்டிப் பாளையத்தில் ஒருமுறை, பொள்ளாச்சியில் மூன்று முறை, தஞ்சையில் ஒருமுறை என, 13 விவசாயக் கண்காட்சிகளைச் சீரும் சிறப்புமாக நடத்தியுள்ளது பச்சை பூமி.

அதைத் தொடர்ந்து, தனது 14 ஆம் விவசாயக் கண்காட்சியை, தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் திருநெல்வேலியில், மூன்றாவது முறையாக, வரும் அக்டோபர் 18, 19, 20, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நடத்துகிறது.

இந்தக் கண்காட்சியில், விவசாயம் செய்யத் தேவையான விதைகள், பழமரக் கன்றுகள், தென்னங் கன்றுகள், உரங்கள், டிராக்டர்கள், ரொட்டோவேட்டர்கள், மருந்து தெளிப்பான்கள், சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள், அரிவாள்கள், கொத்துகள், மண்வெட்டிகள் போன்ற விவசாயக் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் நிறைந்த ஸ்டால்கள் இடம்பெற உள்ளன.

வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, பால்வளத்துறை போன்ற அரசுத் துறைகளின் ஸ்டால்கள், விவசாயம் செழிக்க உதவும் வங்கிகளின் ஸ்டால்களும் இடம் பெற உள்ளன.

மேலும், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் வளர்ப்புக்குத் தேவையான தீவன ஸ்டால்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான ஸ்டால்கள், மதிப்புக்கூட்டுப் பொருள்கள் அடங்கிய ஸ்டால்கள் என, நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன.

விவசாயிகள் மற்றும் வேளாண் நிறுவனங்களை இணைக்கும் பாலமாகப் பச்சை பூமியின் விவசாயக் கண்காட்சி இருப்பதன் மூலம், விவசாயிகள் மற்றும் விவசாயம் வளர்ச்சி அடைய முடியும்.

எனவே, விவசாயப் பெருங்குடி மக்கள், கால்நடைப் பண்ணையாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள், பொது மக்கள் மற்றும் வேளாண்மை வணிக நிறுவனங்கள், இந்த விவசாயக் கண்காட்சியில் திரளாகப் பங்கேற்றுப் பயனடையும்படி அழைக்கிறோம். அனுமதி இலவசம்!

மேலும் விவரங்களுக்கு: +91 8148 777 145


பச்சை பூமி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading