மக்காச்சோள சாகுபடி விவசாயிகளை ஊக்குவித்து, மக்காச்சோள உற்பத்தியைப் பெருக்கும் வகையில், தமிழக அரசு வேளாண்மைத் துறையின் மூலம் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டாரத்தில், வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், மக்காச்சோள சாகுபடி விவசாயிகளுக்குத் தேவையான வீரிய மக்காச்சோள விதைகள், இயற்கை உரம், உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
ஆகவே, மக்காச்சோள சாகுபடியில் ஆர்வமுள்ள விவசாயிகள், தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர் அல்லது எருமப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
செய்தி: எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.