- அறுகம்புல் பொடி: அதிக உடல் எடை, கொழுப்பைக் குறைக்கும், சிறந்த இரத்தச்சுத்தி.
- நெல்லிக்காய்ப் பொடி: பற்கள், எலும்புகள் பலப்படும். வைட்டமின் சி நிறைந்தது.
- கடுக்காய்ப் பொடி: குடல் புண்ணை ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
- வில்வப் பொடி: அதிகமான கொழுப்பைக் குறைக்கும். இரத்தக் கொதிப்பிற்குச் சிறந்தது.
- சிறுகுறிஞ்சான் பொடி: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்து.
- நாவல் பொடி: சர்க்கரை நோய், தலைச்சுற்றலைப் போக்கும்.
- வல்லாரைப் பொடி: நினைவாற்றலுக்கு உகந்தது, நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
- தூதுவளைப் பொடி: நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வறட்டு இருமலுக்குச் சிறந்த மருந்து.
- துளசிப் பொடி: மூக்கடைப்பு, சுவாசப் பிரச்சினைக்குச் சிறந்த மருந்து.
- ஆவரம்பூ பொடி: இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
- கண்டங்கத்திரிப் பொடி: மார்புச்சளி, இரைப்பு நோய்க்குச் சிறந்த மருந்து.
- ரோஜாப்பூ பொடி: இரத்தக் கொதிப்பை மாற்றும், உடலைக் குளிர்ச்சியாக்கும்.
- திப்பிலிப் பொடி: உடல் வலி, அலுப்பு, சளி, இருமலை அகற்றும்.
- வெந்தயப் பொடி: வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை ஆற்றும். சர்க்கரை நோய்க்குச் சிறந்தது.
- கறிவேப்பிலைப் பொடி: கூந்தலைக் கருமையாக்கும். கண்பார்வைக்குச் சிறந்தது.
- வேப்பிலைப் பொடி: குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோயைத் தீர்க்கும்.
- திரிபலாப் பொடி: வயிற்றுப் புண்ணை ஆற்றும், கட்டுப்படுத்தும்.
- அதிமதுரப் பொடி: தொண்டைக் கமறல், வறட்டு இருமலை நீக்கும், குரலை இனிமையாக்கும்.
- துத்தியிலைப் பொடி: உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்குச் சிறந்தது.
- செம்பருத்திப்பூ பொடி: அனைத்து இருதய நோய்களுக்கும் சிறந்தது.
- கரிசலாங்கண்ணிப் பொடி: காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்குச் சிறந்தது.
- சிறியாநங்கைப் பொடி: அனைத்து விஷக்கடி, சர்க்கரை நோய்க்குச் சிறந்த மருந்து.
- கீழாநெல்லிப் பொடி: மஞ்சள் காமாலை, சோகை நோய்க்குச் சிறந்த மருந்து.
- முடக்கத்தான் பொடி: மூட்டு வலி, முழங்கால் வலி, வாதத்துக்கு நல்லது.
- கோரைக்கிழங்குப் பொடி: தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சருமப் பாதுகாப்பிற்குச் சிறந்தது.
- குப்பைமேனிப் பொடி: சொறிசிரங்கு, தோல் வியாதிக்குச் சிறந்தது.
- பொன்னாங்கண்ணிப் பொடி: உடல் சூடு, கண்நோயைப் போக்கும்.
- இலவங்கப்பட்டைப் பொடி: கொழுப்புச்சத்தைக் குறைக்கும். மூட்டுவலியைப் போக்கும்.
- வாதநாராயணன் பொடி: பக்கவாதம், கை, கால் மூட்டு வலியை நீக்கும்.
- பாகற்காய்ப் பொடி: குடல்வால் புழுக்களை அழிக்கும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.
- வாழைத்தண்டுப் பொடி: சிறுநீரகக் கோளாறு, கல் அடைப்புக்குச் மிகச் சிறந்தது.
- மணத்தக்காளிப் பொடி: குடல் புண், வாய்ப்புண், தொண்டைப் புண்ணை ஆற்றும்.
- சித்தரத்தைப் பொடி: சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
- பொடுதலைப் பொடி: பேன் உதிரும், முடி உதிர்வதைத் தடுக்கும்.
- சுக்குப் பொடி: விரணக் கோளாறுகளுக்குச் சிறந்தது.
- ஆடாதொடைப் பொடி: சுவாசக் கோளாறு, ஆஸ்துமாவிற்குச் சிறந்தது.
- கருஞ்சீரகப்பொடி: சர்க்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
- வெட்டிவேர்ப் பொடி: நீரில் கலந்து குடித்துவரச் சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
- நன்னாரிப் பொடி: உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும், சிறுநீரைப் பெருக்கும், நா வறட்சியைப் போக்கும்.
- நெருஞ்சில் பொடி: சிறுநீரகக் கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
- கஸ்தூரி மஞ்சள் பொடி: தினசரி பூசிவர முகம் பொலிவு பெறும்.
- பூலாங்கிழங்குப் பொடி: உடலில் பூசிக் குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
- வசம்புப் பொடி: பால் வாடையை நீக்கும், வாந்தி, குமட்டலைப் போக்கும்.
- சோற்றுக்கற்றாலைப் பொடி: உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்குப் பயன்படும்.
- மருதாணிப் பொடி: கை, கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
- கருவேலம்பட்டைப் பொடி: பல்கறை, பல் சொத்தை, பூச்சிப்பல், பல் வலியைக் குணமாக்கும்.
மு.மகேஷ்வரி