வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு பணப் பரிமாற்றம்!

மின்னணு பண WhatsApp Image 2024 09 09 at 07.53.55 bac63bff 491dda7d05a6d883bf55bab09308c39e

நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) பேபிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், பெறப்படும் வேளாண் இடுபொருள்களுக்கான தொகையை, மின்னணு பணப் பரிமாற்ற முறையில் செலுத்தும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. எனவே, சம்பா பருவத்துக்குத் தேவையான விதைகள், நுண்ணூட்டக் கலவைகள், உயிர் உரங்கள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட இடுபொருள்கள், அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகின்றன.

விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இடுபொருள்களை ஏ.டி.எம். கார்டு, கூகுள்-பே, பேட்டியம், போன்-பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் மூலம், அரசுக் கணக்கில் பணத்தைச் செலுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கும், பணமில்லா மின்னணு பணப் பரிமாற்றம் செய்யும் கருவி வழங்கப்பட்டு உள்ளது.

எனவே, வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் இடுபொருள்களை வாங்க வரும் விவசாயிகள், இடுபொருள்களுக்கான முழுத் தொகை அல்லது பங்களிப்புத் தொகையை, ஏ.டி.எம். கார்டு, கூகுள்-பே, பேட்டியம், போன்-பே, மூலம் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு, தங்கள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகிப் பயன் பெறலாம். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.


செய்தி: வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், நாமக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading