பச்சை பூமி மாத இதழ் சார்பில், ஜனவரி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருவாயைப் பெருக்க உதவும் வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது.
இணையதளம் வாயிலாக மாலை 4 முதல் 6 மணி வரை நடந்த இந்தப் பயிற்சியில் விவசாயிகள், வேளாண் ஆர்வலர்கள் தலா 100 ரூபாய் பதிவுக் கட்டணம் செலுத்தி கலந்து கொண்டனர். தேனியில் உள்ள சென்டெக் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை வகிக்கும் பொ.மகேஸ்வரன் பயிற்சியை வழங்கினார்.
தரிசு நிலம் முதல் நல்ல நீர்வளம் உள்ள நிலங்கள் வரை, எந்தெந்த மண்ணில் எந்த மரங்கள், அவற்றில் எந்தெந்தப் பயிர்களை இட்டு, வருவாயைப் பெருக்குவது என்பதைப் பற்றி அப்போது அவர் விவரித்தார். மேலும், விளை நிலங்களில் மரங்களை வளர்ப்பது குறித்து விவசாயிகளிடம் உள்ள பல்வேறு ஐயங்களை அவர் நிவர்த்தி செய்தார். பின்னர் விவசாயிகளும் தங்களது சந்தேகங்களை ஒவ்வொருவராகக் கேட்டு தெளிவு பெற்றனர்.
வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பில், இதுபோன்ற பயனுள்ள பயிற்சிகளை, வல்லுநர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த விவசாயிகளைக் கொண்டு, பச்சை பூமி சார்பில், இனி வாரந்தோறும் இணைய வழியில் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. விவசாயிகள் அவசியம் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
பச்சை பூமி