அந்துப் பூச்சிகள் பிடிபடுவதில் வானிலை மாற்றங்களின் பங்கு!

PB_Andhupooschi

கட்டுரை வெளியான இதழ்: மே 2021

யறு வகைகளில் சத்துகள் அதிகமாக இருப்பதால், இவை நமது உணவில் முக்கியப் பங்கை வகிக்கின்றன. பயறு வகைகளின் சிறப்பை உணர்த்தும் வகையில், 2016 ஆம் ஆண்டு பயறு வகைகள் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பயறுவகைப் பயிர்களில் ஹெலிகோவர்பா ஆர்மிஜரா என்னும் காய்த்துளைப்பான் அதிகளவில் சேதத்தையும் மகசூல் இழப்பையும் ஏற்படுத்துகிறது.

இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, விவசாயிகள் இரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். இது, சுற்றுச்சூழல் சீரழிவு, நன்மை பயக்கும் பூச்சிகள் அழிவு மற்றும் இரண்டாம் நிலைப் பூச்சிகள் மீண்டெழுதல் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. பெரோமோன் என்னும் இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்துதல், பூச்சி மேலாண்மையில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் முன்கணிப்புக்குச் சிறந்த கருவியாகப் பயன்படுகிறது.

ஆராய்ச்சி முறை

புதுக்கோட்டை மாவட்டம், வம்பனில் உள்ள தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையப் பண்ணையில் துவரை பயிரிடப்பட்டிருந்த நிலத்தில் கள ஆய்வுகள் நடந்தன. பூச்சிகளின் ஊடுருவலைக் கண்காணிக்க, ஹெக்ஸாடெகானோலால் உருவாக்கப்பட்ட ஹெலிலூர் பொருத்தப்பட்ட, பத்துப் பச்சைநிறப் புனல் இனக்கவர்ச்சிப் பொறிகள் நிறுவப்பட்டன. வானிலை அளவுருக்கள் மற்றும் ஹெலிகோவர்பா ஆர்மிஜரா அந்துப் பூச்சிகளின் வாராந்திர சராசரி மதிப்புகள் இடையே எளிய தொடர்பு உருவாக்கப்பட்டது.

முடிவுகள்

ஹெலிகோவர்பா ஆர்மிஜரா அந்துப் பூச்சியின் பருவகால நிகழ்வுகள் வானிலை அளவுருக்களைப் பொறுத்தது என்று முடிவுகள் சுட்டிக் காட்டின. வம்பனில் பயிர்க்காலம் முழுவதும் ஐந்து பொறிகளில் 29 முதல் 98 அந்துப் பூச்சிகள் காணப்பட்டன.

ஜனவரி மாதம் சராசரி வெப்பநிலை 30.6 டிகிரி செல்சியஸ் மற்றும் 20.4 டிகிரி செல்சியஸ், ஈரப்பதம் 91% இருந்த போது, ஐந்து பொறிகளில் அதிகளவாக 98 பூச்சிகள் இருந்தன. அடுத்து, அதிகளவாக ஐந்து பொறிகளில் 97.6 அந்துப் பூச்சிகள் டிசம்பரில் காணப்பட்டன. பிறகு, பயிரின் முதிர்ச்சியைப் பொறுத்து, பிடிபடும் அந்துப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்தது.

இந்த அவதானிப்புகள் சரியான நேரத்தில் முன்கணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும்.


PB_LEKHA PRIYANKA

.லேகா பிரியங்கா,

இ.பத்மஸ்ரீ, தி.சர்மிதா, உ..பிரிதிவிராஜ்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading