நெல்லை மக்கள் போற்றிய விவசாயக் கண்காட்சி 2022

நெல்லை IMG 0003photo scaled

ச்சை பூமியின் ஏழாவது விவசாயக் கண்காட்சி, திருநெல்வேலி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், இம்மாதம் (2022 டிசம்பர்) 16, 17, 18 ஆகிய தேதிகளில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியில், விதைகள், நாற்றுகள், மரக்கன்றுகள், தென்னங் கன்றுகள், இயற்கை உரங்கள், வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள், பாசனக் கருவிகள், வேலிகள், மதிப்புக்கூட்டப்பட்ட உணவுகள் நிறைந்த அரங்குகள்; தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித் துறை, கால்நடைத் துறை, கூட்டுறவுத் துறை, நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் அரங்குகள்; தமிழ் மருத்துவம், வீட்டுப்பயன் பொருள்கள் நிறைந்த அரங்குகள் என, விதவிதமான அரங்குகள்;

விவசாயிகளும், விவசாயிகள் அல்லாத பொது மக்களும் பார்த்துப் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தன. வெளிநாட்டினர் கூட, பச்சை பூமியின் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு அரங்கையும் ஆர்வமுடன் பார்வையிட்டனர். நெல்லை மாநகர மேயர் பி.எம்.சரவணன், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுக் கண்காட்சியைச் சிறப்பித்தார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோயில் ஆகிய மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சியை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளும் வந்து கண்டு களித்தனர்.


பச்சை பூமி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading