கேள்வி:
சம்பங்கி விதைக் கிழங்கு எங்கே கிடைக்கும்?
– வேணு, வளத்தோடு.
பதில்:
அய்யா, சம்பங்கி விதைக் கிழங்குகள், சம்பங்கி சாகுபடி விவசாயிகளிடம் கிடைக்கும். நன்றி!
கேள்வி:
கிரிஷி கோழித் தீவனம் வேண்டும்.
– எம்.முருகன், திண்டிவனம்.
பதில்:
அய்யா, உங்கள் ஊரில் கிருஷி தீவன டீலர் இருந்தால் அவரிடம் கேளுங்கள். அல்லது 04294 223466 என்னும் எண்ணில் தொடர்பு கொண்டு கேளுங்கள். நன்றி!
கேள்வி:
மடி நோய்க்குத் தீர்வு என்ன?
– சண்முகம், இரகுனாதபுரம்.
பதில்:
அய்யா, உங்களுக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி!
கேள்வி:
மானாவாரிப் பழ மரங்கள் பற்றிய தகவல்கள் வேண்டும்.
– சிவபெருமாள், குறிஞ்சிப்பாடி.
பதில்:
அய்யா, உங்களுக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி!
கேள்வி:
இயற்கை வேளாண்மையில், களைக்கொல்லி மருந்துகள் எவை?
– சரோஜா, தாராபுரம்.
பதில்:
அம்மா, இயற்கை வேளாண்மையில் களைக்கொல்லி என்று எதுவும் இல்லை.
கோடை உழவைப் பல தடவை செய்வதன் மூலம், களை விதைகள், கோரைப்புல் போன்ற களைகளின் கிழங்குகள் வெய்யிலில் காய்ந்து அழியும். ஆகவே, கோடை உழவே ஒரு களைக்கொல்லி தான்.
அடுத்து, மூடாக்கு இடுவதன் மூலம் களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். மூடாக்கு இட்டு, பாசனநீர் ஆவியாவதையும் குறைக்கலாம். நன்றி!
கேள்வி:
தேங்காய் விற்பனை விவரம் வேண்டும்.
– ஞானசிவம், மோட்டம்பாளையம்.
பதில்:
அய்யா, வருமானம் அதிகமாக வேண்டும் என்றால், நீங்களே நேரடியாகத் தேங்காய் விற்பனையில் ஈடுபடலாம். இளநீராக, தேங்காயாக விற்கலாம். தேங்காயில் எண்ணெய் போன்ற பொருள்களைத் தயாரித்து விற்கலாம்.
அல்லது இதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்றால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம், தேங்காயாக, கொப்பரையாக விற்பனை செய்யலாம். நன்றி!
கேள்வி:
தேனீ வளர்ப்புப் பயிற்சி எங்கே கிடைக்கும்?
– ஆர்.எஸ்.பசுபதி, சேமங்கலம்.
பதில்:
அய்யா, உங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை அல்லது உழவர் பயிற்சி மையத்தை அல்லது கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை அணுகினால், தேனீ வளர்ப்புப் பயிற்சியைப் பெற முடியும். நன்றி!
கேள்வி:
நாமக்கல் 1 இரகக் கோழி, முட்டைக் கோழியா கறிக்கோழியா?
– சபி முகம்மது, கும்பகோணம்.
பதில்:
அய்யா, இது முட்டைக் கோழியாகும். மேலும் விவரம் அறிய இந்தக் கட்டுரைப் படியுங்கள். நன்றி!
கேள்வி:
மானியத்தில் டிராக்டர் வாங்குவது எப்படி?
– எஸ்.செந்தில்குமார், புதூர், மயிலாடுதுறை.
பதில்:
அய்யா, உங்கள் பகுதியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகிக் கேளுங்கள். அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிக் கேளுங்கள். நன்றி!
கேள்வி:
நேனோ யூரியாவை, தர்ப்பூசணிக்குப் பயன்படுத்தலாமா?
– அஜய், தேரிப்பனை.
பதில்:
அய்யா, தாராளமாகப் பயன்படுத்தலாம். நன்றி!
கேள்வி:
கோழிப்பண்ணை அமைக்க என்ன வகைக் கோழிகளை வாங்க வேண்டும்? இடம் எவ்வளவு இருக்க வேண்டும்?
– B. நரேஷ் குமார், செங்கல்பட்டு.
பதில்:
அய்யா, நீங்கள் கோழிப்பண்ணை அமைக்க விரும்பினால், அதற்கான அடிப்படைப் பயிற்சி அவசியம் தேவை. இதற்கு, செங்கல்பட்டுக்கும் சென்னைக்கும் இடையில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரிக்கு எதிரில், பொத்தேரி ரயில்வே ஸ்டேசனை ஒட்டி, காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையம் உள்ளது.
அங்கே அணுகினால் கோழிப்பண்ணைப் பயிற்சி கிடைக்கும். காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத் தொலைபேசி எண்: 044 2745 2371. நன்றி!
கேள்வி:
வெள்ளைக் கழிச்சல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?
– யுவராஜ், செய்யாறு.
பதில்:
அய்யா, வருமுன் காப்பது மட்டுமே இந்த நோயைத் தடுக்கும் முறையாகும். மேலும், விவரங்களுக்கு இந்தக் கட்டுரையைப் படியுங்கள். நன்றி!
கேள்வி:
வேர்க்கடலையில் மகசூல் அதிகரிக்க என்ன செய்யே வேண்டும்?
– கோதண்டன், அம்மையப்பநல்லூர்.
பதில்:
அய்யா, உங்களுக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி!
கேள்வி:
சப்போட்டா கன்று எங்கே கிடைக்கும்?
– அண்ணாமலை, கீழ்ப்பென்னாத்தூர்.
பதில்:
அய்யா, உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்துக்குச் சென்று கேளுங்கள். விவரம் கிடைக்கும். நன்றி!
கேள்வி:
மா சாகுபடி பற்றிச் சொல்லுங்கள்.
– தினேஷ், சங்ககிரி.
பதில்:
அய்யா, உங்களுக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி!
கேள்வி:
ஊறுகாய்த் தயாரிப்பில், 1 கிலோ ஊறுகாய்க்கு எவ்வளவு வினிகர் பயன்படுத்த வேண்டும்?
– கார்த்திக், போளூர்.
பதில்:
அய்யா, ஊறுகாய்த் தயாரிப்பில் வினிகரை சேர்க்கத் தேவையில்லை என்பது, சத்தியல் வல்லுநர்களின் கருத்து. ஊறுகாய்ப் புட்டியை வினிகரால் சுத்தம் செய்தால் போதும் என்று கூறுகிறார்கள். நன்றி!
கேள்வி:
கொய்யாவில் மதிப்புக்கூட்டுப் பயிற்சி எங்கே கிடைக்கும்?
– பிரபாகரன், திருவண்ணாமலை.
பதில்:
அய்யா, இங்கே கூறியுள்ள முகவரியை அணுகுங்கள்.
Veterinary University Training and Research Centre,
Bye Pass Road, Near to Govt. Medical College,
Vada Andapattu, Tiruvannamalai- 606 604.
போன்: 04175- 298 258.
அல்லது,
The Senior Scientist and Head,
ICAR-Krishi Vigyan Kendra,
Kilnelli Village, Chithathur post,
Vembakkam taluk, Thiruvannamalai Dt,
Tamil Nadu 604410.
போன்: 82200 04286. 63840 93303.
04182-290551
இந்த முகவரியை அணுகுங்கள். நன்றி!