நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 8!

நீங்கள் கேட்டவை

கேள்வி:

என்னுடைய நிலத்தில் தென்னை மரங்களை வளர்க்கலாம் என்று எண்ணியிருக்கிறேன். அதை வளர்த்துப் பக்குவம் செய்து கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்களா? அல்லது அதற்கான நிறுவனங்கள் இருக்கின்றனவா?

– KA அப்துஸ்ஸமத், ஈரோடு.

பதில்:

அய்யா, இங்கே கொடுத்துள்ள நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி!

பசுமை பாரதம்,

திருச்சி,

91594 27033.


கேள்வி:

எந்தெந்த மாதங்களில் என்னென்ன பயிர்கள் செய்யலாம்? என்னென்ன பயிர்கள் நிரந்தர இலாபம் தரும்?

– கவியரசி, இராசிபுரம்.

பதில்:

அம்மா, நிரந்தரமாக இருந்து பலன் தர வேண்டுமென்றால், பழ மரங்களை வளர்க்கலாம். மற்றபடி, எந்தெந்த மாதங்களில் என்னென்ன பயிர்கள் செய்யலாம் என்னும் கேள்விக்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரையில் உள்ளது. நன்றி!

வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி?


கேள்வி:

பைனாப்பிள் விதை வேண்டும்.

– ஆர்.தேவகுமார், மேட்டுப்பாளையம்.

பதில்:

அய்யா, மேட்டுப்பாளையத்தில் உள்ள விதை விற்பனைக்கடை, உர விற்பனைக் கடைகளில் கேட்டுப் பாருங்கள், கிடைக்கும். அல்லது எங்கே கிடைக்கும் என்னும் தகவலைச் சொல்வார்கள். அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகிக் கேளுங்கள். நன்றி!


கேள்வி:

வெங்காயத் தண்டு பிரச்னைக்கு என்ன காரணம்?

– சி.செல்வராஜு, தாராபுரம்.

பதில்:

அய்யா, உங்கள் கேள்விக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி!

விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி!


கேள்வி:

பொள்ளாச்சியில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற, சிறந்த நெட்டை குட்டை தென்னை இரகம் எது?

– வரதராஜ், பொள்ளாச்சி.

பதில்:

அய்யா, உங்கள் கேள்விக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி!

தென்னை வகைகள்!

உயர் விளைச்சலைத் தரும் தென்னை இரகங்கள்!


கேள்வி:

தக்கைப்பூண்டு விதை கிடைக்குமா?

– ஆர்.கே.ஸ்டாலின், நெய்வேலி.

பதில்:

அய்யா, உங்கள் ஊரில் உள்ள விவசாய டெப்போவுக்குச் சென்று கேளுங்கள். அல்லது உங்கள் ஊரிலுள்ள உரக்கடை அல்லது விதை விற்பனைக் கடையில் கேட்டால் கிடைக்கும். நன்றி!


கேள்வி:

எனது நிலம் களிமண். நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ளது. இங்கு நாவல் மரம் நட்டால் சிறப்பாக வருமா?

– பிரபானந்தம், சாலவாக்கம்.

பதில்:

அய்யா, உங்கள் கேள்விக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி!

நாவல் சாகுபடி!


கேள்வி:

தென்னையில் நிலத்தை உழவே வேண்டாம் என்கிறார்கள். தங்கள் அலோசனை என்ன?

– இளங்கோவன் சுப்பிரமணியம், காரிமங்கலம்.

பதில்:

அய்யா, தென்னந் தோப்பில் உழவு செய்தால், நோய்க் காரணிகளான பூச்சிகளின் தங்குமிடமாக விளங்கும் களைகளை அழிக்கலாம்.

இதன் மூலம், தென்னையைத் தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சித் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தலாம்.

உழுது மடக்கி விடப்படும் களைகள், மண்ணுக்கு உரமாகும். அது தென்னைக்கும் பயன்படும்.

உழுது போட்ட நிலத்தில் மழைநீரை நன்றாகச் சேமிக்கலாம்.

மரங்களில் இருந்து விழும் காய்களைச் சேகரிக்க ஏதுவாக இருக்கும்.

இப்படி, பல நல்லதுகள் உண்டு.

உழவே செய்யாமல் புதர் மண்டிக் கிடக்கும் தென்னந் தோப்பை, அப்படியே மனத் திரையில் ஓட விட்டுப் பாருங்களேன்.

இத்தகைய தோப்புக்குள் கூசாமல் கால் வைத்து நடக்க முடியுமா?

பாம்பு, பூரான், தேள் மட்டுமல்ல, தென்னங் காய்களைக் கடித்துச் சிதைக்கும் எலிகளின் கூடாரமாக மாறி விடாதா உங்கள் தோப்பு?

இதனால், உங்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை, உங்கள் தென்னை மகசூலுக்கும் பாதிப்பு.

ஆள் பாதி ஆடை பாதி என்பதைப் போல, எத்தனை தான் நீங்கள் உரமிட்டு நீர்விட்டு வளர்த்தாலும், தென்னை மகசூலில், உங்கள் தோப்பு பராமரிப்புக்கும் பங்கு உண்டு.

தென்னந் தோப்பைச் சுத்தமாகப் பராமரித்து, அதைச் சுற்றிச் சுற்றி வரும் போது, உங்கள் தென்னை மரங்களில் என்ன நடக்கிறது, என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தீர்மானிக்க முடியும். நன்றி!


கேள்வி:

சினை மாட்டுக்குப் பூச்சி மருந்து உள்ளதா? சக்தியைத் தரும் ஊசி இருக்கிறதா?

– பாலு, சேலம்.

பதில்:

அய்யா, கால்நடை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், சினை மாட்டுக்கு, பூச்சி மருந்தையோ, சக்தி தரும் ஊசியென்று எதையும் கொடுக்கக் கூடாது. உங்களுக்குப் பக்கத்தில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகிக் கேளுங்கள். நன்றி!


கேள்வி:

உப்பு நீரை நல்ல நீராக மாற்றுவது எப்படி?

– ஆ.விஜயன், நக்கனேரி.

பதில்:

அய்யா, உங்கள் கிணற்று நீரைப் பரிசோதனை செய்யுங்கள். அப்போது அந்த நீரில் உள்ள உப்பின் அளவைப் பொறுத்து, என்ன செய்யலாம் என்று ஆலோசனை கூறுவார்கள். நன்றி!


கேள்வி:

தக்கைப்பூண்டு விதைத்து அதிக நாள் கடந்து மடக்கி உழுதால், அதிகப் பலன் கிடைக்குமா?

– ஜெயன், பழையகோட்டை.

பதில்:

அய்யா, தக்கைப்பூண்டை விதைத்து அது பூக்கும் போது, அதாவது, சுமார் 45 நாளில் மடக்கி உழ வேண்டும் என்பது தான் வேளாண் வல்லுநர்களின் கருத்து. நன்றி!


கேள்வி:

வாழைக்கன்று நடவு செய்து மூன்று மாதம் ஆகிறது. இலை மஞ்சள் கலரில் மாறுகிறது. என்ன மருந்து பயன்படுத்த வேண்டும்?

– ரா.சுப்பிரமணியன், விஜயநாராயணம்.

பதில்:

அய்யா, உங்கள் கேள்விக்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரையில் உள்ளது. நன்றி!

வாழையைத் தாக்கும் நோய்களும் தீர்வுகளும்!


கேள்வி:

தென்னங் கன்றுகள் நடவு செய்து ஒன்றரை ஆண்டு ஆகிறது. வளர்ச்சி குறைவாக உள்ளது. மட்டை நுனியில் காய்கிறது. இதற்கு என்ன விதமான இயற்கை உரம் கொடுக்க வேண்டும் ?

– சந்திரசேகரன், இரா.புதுப்பட்டி.

பதில்:

அய்யா, உங்கள் கேள்விக்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரைகளில் உள்ளது. நன்றி!

தென்னையில் நல்ல மகசூலைத் தரும் சமச்சீர் உரங்கள்!

தென்னைக்கு ஏற்ற மண்வளமும் உர நிர்வாகமும்!


கேள்வி:

வில்வ மரம் தேவைப்படுகிறது.

– கோபிநாத், பொம்மிடி.

பதில்:

அய்யா, நர்சரிகளில் கேட்டால் கிடைக்கும். நன்றி!


கேள்வி:

நடவுப் புற்கள் எங்கே கிடைக்கும்?

– சண்முகம், காரமடை.

பதில்:

அய்யா, புல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் கேட்டால் கிடைக்கும். நன்றி!


கேள்வி:

சணப்பு விதை வேண்டும்.

– வேலன், தருமபுரி.

பதில்:
அய்யா, தருமபுரியில் உள்ள விவசாய டெப்போவில் கேளுங்கள். அல்லது உங்கள் ஊரிலுள்ள உரக்கடை, விதைகள் விற்பனைக் கடைகளில் கேளுங்கள் கிடைக்கும். நன்றி!


கேள்வி:

சிறந்த தென்னை இரகம் வேண்டும்.

– செல்வேந்திரன், தேனி,

பதில்:

அய்யா, உங்களுக்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரையில் உள்ளது. நன்றி!

தென்னை வகைகள்!

உயர் விளைச்சலைத் தரும் தென்னை இரகங்கள்!


கேள்வி:

ஆடு வளர்ப்புப் பயிற்சி தொடர்பான தகவல் வேண்டும்.

– இராகேஷ் கண்ணன், கம்பம்.

பதில்:

அய்யா,

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,

உழவர் பயிற்சி மையம், தேனி,

சார் நிலை கருவூலகம் எதிரில், ரயில்வே கேட் அருகில்,

மதுரை ரோடு, தேனி – 625 531.

தொலைபேசி: +91- 4546 – 260047, +91-9865016174

அல்லது

சென்டெக்ட் வேளாண்மை அறிவியல் மையம், தேனி,

தொலைபேசி: 04546-247564

இந்த முகவரியை அணுகுங்கள். பயிற்சிக் கிடைக்கும். நன்றி!


கேள்வி:

முருங்கை சாகுபடியைப் பற்றிக் கூறுங்கள்.

– குருபாக்கியம், இராஜபாளையம்.

பதில்:

அய்யா, உங்களுக்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரையில் உள்ளது நன்றி!

முருங்கைக்காய் சாகுபடி உத்திகள்!


கேள்வி:

அவதார் 515 மிளகாய் இரகம் நன்கு காய்க்குமா?

– இராஜா, சங்கரன்கோவில்.

பதில்:

அய்யா, உங்கள் ஊரில் இந்த இரகம் நன்றாகக் காய்க்கும் அல்லது காய்க்காது என்று மேம்போக்காகக் கூறிவிட முடியாது. அங்குள்ள அனுபவ விவசாயிகள் அல்லது உங்கள் பகுதி வேளாண்மை அலுவலர்களை அணுகிக் கேளுங்கள். நன்றி!


 

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading