கேள்வி:
கிடா ஆடு வளர்ப்புத் தொடர்பான ஆலோசனை தேவை.
– சே.சாந்தி, பெரம்பலூர்.
பதில்:
அம்மா, கிடா வளர்ப்பு என்பது, ஆடு வளர்ப்பைப் போன்றது தான். அதற்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரையில் உள்ளது. படியுங்கள். நன்றி!
கேள்வி:
மாட்டுப் பண்ணை அமைப்பது எப்படி? எப்படிப்பட்ட மாடுகளை வாங்கி வளர்க்கணும்? இதற்குக் கடன் கிடைக்குமா?
– கோவிந்தராஜு வீரப்பன், அவனம்,
பதில்:
அய்யா, உங்கள் கேள்விகளுக்கு இங்கே முழுமையாக விளக்கம் அளிக்க முடியாது. ஏனெனில், நீங்கள் கேட்பது கடல் போன்று பெரியது. நீங்கள் எந்தச் சூழலில் இருந்து கேட்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. எனவே, பொதுவான சில கருத்துகளை இங்கே கூறுகிறேன்.
நீங்கள் பால் பண்ணை அமைக்க விரும்பினால், நல்ல இட வசதி வேண்டும். பசுந்தீவன உற்பத்திக்கு நிலம் இருக்க வேண்டும். கறவை மாடுகள் வளர்ப்பைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.
வங்கிகளை அணுகினால் கடன் கிடைக்கும். அது உங்களின் முயற்சியைப் பொறுத்தது.
பால் பண்ணை வைப்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், உங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகி, கறவை மாடு பயிற்சியைப் பெறுங்கள். இது மிக மிக முக்கியம். அங்கே, உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்கள் அனைத்தும் கிடைக்கும்.
www.pachaiboomi.in இணையதளத்தில் மாடுகள் வளர்ப்புக் குறித்த தகவல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றைப் படியுங்கள். சாம்பிளுக்கு இங்கே இரண்டு கட்டுரைகள் தரப்பட்டு உள்ளன. நன்றி!
கேள்வி:
நெல் அறுவடை. முடிந்து விட்டது. வயலில் ஆரக்கொடி அதிகமாகப் படர்ந்துள்ளது. எவ்வாறு கட்டுப்படுத்துவது?
– கி.தோகைமயில் நாதன், கும்பகோணம்.
பதில்:
அய்யா, வெய்யில் காலம் தானே? கோடை உழவு போட்டால் அவ்வளவு கொடியும் மண்ணுக்கு உரமாகி விடும். அதைச் செய்யுங்கள். நன்றி!
கேள்வி:
மண்வளம் குன்றா பூச்சிக்கொல்லி தேவை.
– அன்பழகன், அருமலைக்கோட்டை
பதில்:
அய்யா, உங்களுக்குத் தேவையான விளக்கம் இங்கே தரப்பட்டுள்ள கட்டுரைகளில் உள்ளது. இதைப் போன்ற பல தகவல்கள் அடங்கிய கட்டுரைகள், www.pachaiboomi.in இணையதளத்தில் உள்ளன. அவற்றையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். நன்றி!
காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறைகளில் கட்டுப்படுத்துதல்!
கேள்வி:
கோ.57 கருப்பு நெல் தேவை.
– துரைமுருகன், கடலூர்.
பதில்:
அய்யா, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கேட்டுப் பாருங்கள். தொலைபேசி எண்: 04367 – 260666.
அல்லது கீழேயுள்ள முகவரியில் தொடர்பு கொண்டு கேளுங்கள்
Director,
Seed Centre,
Tamil Nadu Agricultural University,
Coimbatore – 641 003.
Phone: 0422-6611232. நன்றி!
கேள்வி:
ஆடு வளர்ப்புக் குறித்துக் கூறுங்கள்
– குணசேகரன், மொடையூர்.
பதில்:
அய்யா, ஆடு வளர்ப்பில் விருப்பம் இருந்தால், முதலில், உங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகி, ஆடு வளர்ப்புப் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள். இது தான் சிறந்த வழி.
www.pachaiboomi.in இணையதளத்தில், ஆடு வளர்ப்புக் குறித்த தகவல்கள் நிறைய உள்ளன. அவற்றைப் படியுங்கள்.நன்றி!
கேள்வி:
காராமணிச் செடியின் வளர்ச்சிக்கும், நன்கு காய்க்கவும் என்ன செய்ய வேண்டும்?
– மு.ஆனந்தன், தென்பேர்.
பதில்:
அய்யா, உங்களுக்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரையில் உள்ளது. நன்றி!
கேள்வி:
சூரிய உலர்த்தி வாங்குவதற்கு யாரை அணுக வேண்டும்?
– கருணாநிதி, ஆவடையார்பட்டு.
பதில்:
அய்யா, உங்கள் பகுதியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகுங்கள். அல்லது உங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகினாலும், சரியான தகவல் உங்களுக்குக் கிடைக்கும். நன்றி!
கேள்வி:
தேனீக் கூட்டை எப்படி உருவாக்குவது?
– ஜனனி, கும்பகோணம்.
பதில்:
அம்மா, முறையாகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மூலம் தேனீ வளர்ப்புப் பயிற்சியைப் பெற முடியும். தஞ்சாவூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகுங்கள். முகவரி:
பக்தவச்சலம் நினைவுக் குழு வேளாண் அறிவியல் நிலையம், உசிலம்பட்டி அஞ்சல், செஞ்சிப்பட்டி வழி, தஞ்சாவூர். தொலைபேசி : 04362 – 221474.
அல்லது கீழேயுள்ள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
Veterinary University Training and Research Centre,
Pillaiyarpatti Post, Thanjavur – 613 403
தொலைபேசி: 04362 – 264665. நன்றி!
கேள்வி:
காடை வளர்ப்புக் குறித்துக் கூறுங்கள்.
– பழனியப்பன் ராமலிங்கம், வேந்தன்பட்டி.
பதில்:
அய்யா, உங்களுக்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரையில் உள்ளது. நன்றி!
கேள்வி:
தென்னை மரத்துக்குள் மாடு வளர்க்கலாம். தென்னைக்குள் கோழி வளர்க்கலாமா?
– T.கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிக்கோவில், ஈரோடு.
பதில்:
அய்யா, தாராளமாக வளர்க்கலாம். ஆடு வளர்க்கலாம், மாடு வளர்க்கலாம், கோழிகள் வளர்க்கலாம், ஜப்பான் காடைகள் வளர்க்கலாம், கயலும் வளர்க்கலாம், முயலும் வளர்க்கலாம், காளானும் வளர்க்கலாம், உங்கள் தென்னந் தோப்பை, கலப்புப் பண்ணையாக ஆக்கலாம். நல்ல வருவாயும் பெறலாம். முயற்சி செய்யுங்கள். நன்றி!
கேள்வி:
நல்ல கோழிக் குஞ்சுகள் விலை குறைவாக எங்கே கிடைக்கும்? மொத்தமாக விற்கும் போது, விலை குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
– ஹரிஹரன், திருவண்ணாமலை.
பதில்:
அய்யா, நீங்கள் மொத்தமாகக் குஞ்சுகளை வாங்கி வளர்க்கும் போது, ஒரு கட்டத்தில் மொத்தமாகத் தான் விற்றாக வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால் தீவனச் செலவு தான் ஆகும். அப்போது நீங்கள் கோழி வியாபாரியை நாடினால், அவர் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, குறைந்த விலைக்குத் தான் கேட்பார். நீங்களும் வேறு வழியில்லாமல் கொடுத்துத் தான் ஆக வேண்டும்.
நீங்களே நேரடியாக விற்கும் போது உங்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். உங்களிடம் கோழி கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொண்டால், நேரடியாக மக்களே உங்களிடம் வந்து விடுவார்கள். நீங்களே உள்ளூர் கறிக்கடைகளை அணுகலாம்.
அடுத்து, நீங்களே குஞ்சுகளை உற்பத்தி செய்து கொள்வதே நல்லது. வெளியே மொத்தமாகக் குஞ்சுகளை வாங்குவது பெரிய செலவாக அமையும். எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் தற்சார்பு நிலையை அடையும் போது தான் ஜெயிக்க முடியும்.
நீங்களே ஐந்து பெட்டைக் கோழி, ஒரு சேவலை வாங்கி வளர்த்தால், ஒரே நேரத்தில் குறைந்தது ஐம்பது குஞ்சுகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும். இப்படி, தவணை தவணையாகக் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் போது, ஒரே நேரத்தில் விற்றாக வேண்டும் என்னும் கட்டாய நிலை ஏற்படாது.
எப்போது வந்தாலும் உங்களிடம் கோழிகள் கிடைக்கும் என்பதை நீங்கள் உறுதி செய்து விட்டால், நீங்கள் கோழி வளர்ப்பில் கெட்டிக்காரர் தான்.
கோழி வளர்ப்பில் ஈடுபட விரும்பினால், கோழி வளர்ப்புப் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள். திருவண்ணாமலையில் உள்ள இந்த அலுவலகத்தை அணுகினால் உங்களுக்குப் பயிற்சி கிடைக்கும்.
Assistant Professor and Head,
Veterinary University Training and Research Centre,
Bye Pass Road,
Near to Govt. Medical College,
Vada Andapattu,
Tiruvannamalai – 606 604.
தொலைபேசி: 91-4175-298258 நன்றி!
கேள்வி:
வம்பன் 3 இரகத் துவரை விதை 2 கிலோ வேண்டும்.
– சங்கர், கல்பாக்கம்.
பதில்:
அய்யா, உங்கள் பகுதியில் உள்ள விவசாய டெப்போவில் கேளுங்கள். அங்கே கிடைக்கவில்லை என்றால் கீழே கூறியுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
தேசியப் பயறு வகை ஆராய்ச்சி நிலையம்,
State Highway 71, Colony,
Vamban,
புதுக்கோட்டை- 622303,
தொலைபேசி: 04322-296447. நன்றி!
கேள்வி:
கோடைக்கால நெல் சாகுபடிக்கு ஏற்ற சன்ன இரகம் பற்றிக் கூறுங்கள்.
– கருப்பையா சேர்வை, கோவில்பட்டி.
பதில்:
அய்யா, உங்களுக்கான தகவல் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி!
கேள்வி:
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுக்காவில் எந்த இரக ஆடு வளர்க்கலாம்?
– சி.முருகன், வீ.புதுப்பாளையம்.
பதில்:
கன்னி ஆடு, கொடி ஆடு, சேலம் கறுப்பாடு, ஜமுனாபாரி ஆடு, தலைச்சேரி ஆடு போன்றவற்றை வளர்க்கலாம்.
மேலும், ஆடு வளர்ப்பு விவரங்களை அறிய இங்கேயுள்ள கட்டுரையைப் படிக்கவும். நன்றி!
கேள்வி:
எனக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 30 ஆடுகளை வளர்க்க ஆசைப்படுகிறேன். நல்ல யோசனை கூறுங்கள்.
– ஷாஜஹான், அரசூர்.
பதில்:
அய்யா, நன்றாக வளர்க்கலாம். அதற்கு முன், ஆடு வளர்ப்பைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.
Veterinary University Training and Research Centre,
Veterinary Hospital Campus (Near New bus stand),
Velipalayam, Nagapattinam – 611 001.
Phone: +91-4365-247123.
அல்லது
Veterinary University Training and Research Centre,
Pillaiyarpatti Post, Thanjavur – 613 403
தொலைபேசி: 04362 – 264665.
இந்தப் பயிற்சி மையத்தை அணுகினால், உங்களுக்கு ஆடு வளர்ப்புப் பற்றிய பயிற்சி கிடைக்கும். இந்தப் பயிற்சியில் உங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள், நீங்கள் ஆடு வளர்ப்பில் சிறப்பாக இயங்க உதவும். செய்யுங்கள். நன்றி!