கேள்வி:
நான் இப்போது வாழை நடவு செய்துள்ளேன். அதில் வெங்காயம் பயிர் செய்துள்ளேன். அதன் அறுவடை முடிந்ததும், கடலையைப் பயிர் செய்ய இருக்கிறேன். அதற்கு என்ன உரம் இடவேண்டும் என்று கூறினால் நன்றாக இருக்கும்.
– எம்.ஜெயவீரன், தெக்குப்பட்டு.
பதில்:
உங்களுக்கு வேண்டிய தகவல்கள் கீழே உள்ள கட்டுரையில் உள்ளன.
கேள்வி:
இயற்கை முறையில் மாட்டின் கருப்பையைச் சுத்தம் செய்வது எப்படி?
– ஆதி, மைலாப்பூர்.
பதில்:
உங்களுக்கு வேண்டிய தகவல்கள் கீழே உள்ள கட்டுரையில் உள்ளன.
கேள்வி:
மிளகாய், கத்தரிக்காய் சாகுபடி முறையைக் கூறுங்கள்.
– எஸ்.செல்வம், அகரம்.
பதில்:
உங்களுக்கு வேண்டிய தகவல்கள் கீழே உள்ள கட்டுரைகளில் உள்ளன.
கேள்வி:
பனை சாகுபடியில், ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்?
– போ.முருகேசன், நூ.சின்னையாபுரம்.
பதில்:
பொதுவாக 10 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
கேள்வி:
சந்தனம் மரம் பயிரிட என்ன செய்ய வேண்டும்? அரசு அனுமதி பெற வேண்டுமா?
– ஆர்.உமா காயத்ரி, சிங்காரக்கோட்டை.
பதில்:
உங்களுக்குத் தேவையான சந்தன மரக் கன்றுகளைப் பெற, உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். சந்தன மரங்களை வளர்க்க, அரசு அனுமதி எதுவும் பெறத் தேவையில்லை.
ஆனால், உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று, அங்குள்ள உங்கள் நில ஆவணத்தில், சந்தன மரங்கள் வளர்ப்பதைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது, பின்னாளில் நீங்கள் இந்த மரங்களை வெட்டுவதற்கு மிகவும் அவசியம்.
கேள்வி:
வேர்க்கடலை சாகுபடியைப் பற்றிக் கூறுங்கள்.
– தமிழரசன், கீழ்ப்பட்டு.
பதில்:
உங்களுக்கு வேண்டிய தகவல்கள் இந்தக் கட்டுரையில் உள்ளன.
கேள்வி:
எங்கள் நிலத்தில் தேக்கு, செம்மருது, கருமருது பயிரிடலாமா?
– சகுந்தலா, கறம்பக்குடி.
பதில்:
தாராளமாகப் பயிர் செய்யலாம். ஆனால், உங்கள் நிலத்தில் இந்த மரப் பயிர்களை சாகுபடி செய்துள்ள விவரத்தை, உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலகம் சென்று, அங்குள்ள உங்கள் நில ஆவணத்தில் (பட்டாவில்) பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தப் பதிவு, பின்னாளில் இந்த மரங்களை வெட்டுவதற்கு அவசியம் தேவைப்படும்.
கேள்வி:
கோவைக்காய் சாகுபடியைப் பற்றிச் சொல்லுங்கள்.
– அவ்வைதாசன், காரைக்கால்,
பதில்:
உங்களுக்கு வேண்டிய தகவல்கள் இந்தக் கட்டுரையில் உள்ளன.
கேள்வி:
இந்தப் பருவத்துக்கு ஏற்ற உளுந்து இரகம் எது?
– பி.சுரேஷ்பாபு, சின்ன அரச்சிக்குப்பம்.
பதில்:
உங்களுக்கு வேண்டிய தகவல்கள் இந்தக் கட்டுரையில் உள்ளன.
கேள்வி:
கத்தரிச் செடி எத்தனை மாதம் காய்க்கும்?
– சரவணன், தம்மம்பட்டி.
பதில்:
நடவு செய்து சுமார் அறுபது நாட்களில் முதல் அறுவடையைச் செய்யலாம். அதைத் தொடர்ந்து, பராமரிப்பைப் பொறுத்து, அடுத்து இரண்டு மாதங்கள் வரை காய்கள் கிடைக்கும். மேலும் தகவல்களுக்கு இங்கே இணைத்துள்ள கட்டுரையைப் படியுங்கள்.
கேள்வி:
மாட்டுக்கு அடிக்கடி நோய் வருகிறது. நடமாடும் கால்நடை மருத்துவ வசதி உள்ளதா?
– பன்னீர், இளநகர்.
பதில்:
கலப்பின மாடுகளை நோய்கள் தாக்கலாம். சுத்தமான கொட்டில், நல்ல தீவனம், சரியான காலத்தில் மாடுகளுக்குத் தடுப்பூசிகளைப் போடுதல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால், நோய்கள் தாக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.
நடமாடும் கால்நடை மருத்துவ வசதி இல்லை. ஆனால், உங்கள் பகுதி கால்நடை மருத்துவ மனையில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகினால், உங்கள் பண்ணைக்கே வந்து மருத்துவம் செய்யும் வசதி கிடைக்க வாய்ப்புள்ளது.
கேள்வி:
தென்னை நடலாமா? ஒரு ஏக்கருக்கு எத்தனை மரங்கள் வளர்க்கலாம்? நல்ல இரகம் தேவை.
– எம்.சாதிக்பாட்சா, மணியாங்குறிச்சி.
பதில்:
உங்கள் நிலத்தின் மண்வளம், வெய்யில் காலத்திலும் நல்ல நீர்வளம் இருந்தால் தென்னையை வளர்க்கலாம். தென்னையைத் தோப்பாக வளர்க்க, 25 அடி இடைவெளியும், வரப்புகளில் வளர்க்க 22 அடி இடைவெளியும் விட வேண்டும். மேலும் விவரங்களுக்கு, இங்கே தரப்பட்டுள்ள கட்டுரைகளைப் படியுங்கள்.
கேள்வி:
எங்களிடம் காங்கேயம் கன்றுகள் உள்ளன. தீவனப் பராமரிப்பைப் பற்றிக் கூறுங்கள்.
– பி.ஸ்ரீதரன், செங்கல்பட்டு.
பதில்:
உங்களுக்குத் தேவையான தகவல்கள் இங்கே இணைத்துள்ள கட்டுரையில் உள்ளன.
கேள்வி:
இராகி சாகுபடி முறையைப் பற்றிய விளக்கம் வேண்டும்.
– வேலம்மாள், கோயம்புத்தூர்.
பதில்:
உங்களுக்குத் தேவையான தகவல்கள் இங்கே இணைத்துள்ள கட்டுரையில் உள்ளன.
கேள்வி:
மிளகாயில் சுருட்டை இருக்கிறது. என்ன மருந்து அடிக்கலாம்?
– காளிராஜ், கோவில்பட்டி.
பதில்:
உங்களுக்கான தகவல் இந்தக் கட்டுரையில் உள்ளது.
கேள்வி:
வெள்ளாடு, கோழி, கறவை மாட்டுக்கான குருணை வடிவத் தீவனம் குறித்த வழிமுறைகள் தேவை.
– மகேந்திரன், முதுகுளத்தூர்.
பதில்:
உங்களுக்குத் தேவையான தகவல்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளில் உள்ளன.
குறிப்பு: நீங்கள் கேட்டவை என்னும் இந்த பகுதியில் இடம்பெறும் கேள்விகள் அனைத்தும் வாசகர்கள், பச்சை பூமி இணையதளத்தில் உள்ள “சந்தேகமா? கேளுங்கள்!” என்னும் பகுதியில் கேட்டவை. நீங்களும் உங்கள் சந்தேகங்களை இதேபோல கேட்டு, பதில்களைப் பெற்றுப் பயன் பெறலாம்.!